காவிரி விவகாரம்.. விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 2:03 pm

கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வை காவிரி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்த வழக்கு 57 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், வரும் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் புதிய அமிர்வு முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய துணை முதல்வர் டிகே சிவக்குமார், “கர்நாடகாவில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அணைகளில் போதிய நீர் இல்லை. நம் மாநில உணவு விவசாயிகளின் நலன் கருதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.” எனக் கூறியுள்ளார்.

மேலும், நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜேடி(எஸ்) தலைவர் எச்டி குமாரசாமி, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மக்களவை எம்பி சுமலதா அம்பரீஷ் மற்றும் பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!