ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் கால் எடுத்து வைக்கக் கூடாது… இனி தமிழ்ப்படங்களை ஓட விடமாட்டோம் ; வாட்டாள் நாகராஜ் மிரட்டல்!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 9:54 am

கர்நாடகாவுக்குள் ரஜினிகாந்த் நுழையக்கூடாது என்று கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகா அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இதனிடையே, கர்நாடகா அணையில் இருந்து 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், போதுமான நீர் இல்லை என்று தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதேபோன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு தரப்பு மனுக்களையும் நிராகரித்தது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா அரசின் இந்த முடிவை கண்டித்து அம்மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கர்நாடகத்தில் தமிழ்ப்படங்களை ஓடவிடமாட்டோம் என்றும், ரஜினிகாந்த் கர்நாடகத்திற்குள் நுழையக்கூடாது என்றும் வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். கர்நாடகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்களோ, அவர்களை காவிரி தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று கூற முடியுமா..? என்றும், தமிழர்களை தமிழ்நாட்டுக்கே அழைத்துக்கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?