காவிரி விவகாரம்… ரஜினி மீது பழிபோடும் விசிக… கர்நாடக காங்கிரசுக்காக ஓட்டுக்கேட்ட திருமா பேசலமா..? ரஜினி ரசிகர்கள் ஆவேசம்…!

Author: Babu Lakshmanan
30 September 2023, 2:49 pm

காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சீண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ரஜினியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவும் உத்தரவிட்டும், தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இதையடுத்து, வேறு வழியில்லாமல் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டது.

இதற்கு எதிர்ப்பு கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், கன்னட திரையுலக நடிகர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதனிடையே, காவிரி நதிநீர் விவகாரத்தை காரணம் காட்டி, பெங்களூரூவில் பட ப்ரோமோஷனுக்காக சென்ற நடிகர் சித்தார்த்தை அவமதித்து கன்னட அமைப்பினர், அவரை வெளியேற்றினர். இந்த சம்பவத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் மன்னிப்பு கோரினர்.

சித்தார்த்திற்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு எதிராகவும், காவிரி நதிநீர் விவகாரத்திற்காக தமிழக நடிகர்கள் வாய்திறக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கள்ளமவுனம் காப்பது ஏன்..? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர் ஸ்டார் வன்னியரசு, சூப்பர் ஸ்டார் ரஜினியா..? பிரகாஷ் ராஜா..? என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு நடிகர் ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டிக்கும் விதமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குசேகரித்த திருமாவளவன், காவிரிநீர் தரமறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து எப்போது வாய் திறப்பார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், கூட்டணியில் இருக்கும் திமுகவையும், காங்கிரஸையும் கேள்வி கேட்காமல், நடிகர் ரஜினிகாந்த்தை குறிப்பிட்டு கேள்வி கேட்பது, ஏதேனும் உள்நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கர்நாடகாவில் கன்னட அமைப்பு தலைவரான வாட்டாள் நாகராஜ், ரஜினியின் புகைப்படத்தை எரித்ததுடன், அவரை கர்நாடகாவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ரஜினி ரசிகர்கள், கன்னடனுக்கு தெரிந்த ஒரே தமிழன் ரஜினி என்றும், தமிழனுக்கு தெரிந்த ஒரே கன்னடன் ரஜினிதான் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…