தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு.. வாட்டாள் நாகராஜ் திட்டத்தை தவிடுபொடியாக்கிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2023, 1:26 pm
தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு.. வாட்டாள் நாகராஜ் திட்டத்தை தவிடுபொடியாக்கிய போலீசார்!!
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கூடாது என வலியுறுத்தி கன்னட சலுவலி வாட்டள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மாநிலம் தழுவிய பந்த் நடத்தி வருகிறார்.
இந்த பந்த் போராட்டத்தை முன்னிட்டு பெங்களூர் டவுன்ஹால் பகுதியில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணி செல்ல வாட்டாள் நகராஜ் திட்டமிட்டு இருந்தார்.
பேரணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொள்ள டவுன்ஹால் வந்த வாட்டள் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
சுதந்திரப் பூங்கா தவிர மற்ற இடங்களில் போராட்டம் நடத்த தடை விதித்து பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது