சிபிஎஸ்இ முடிவுகள் இன்னும் வரல…. அதுக்குள்ள என்ன அவசரம்? கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி போட்ட கண்டிஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 10:04 am

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடித்துக்கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று யுஜிசி வலியுறுத்தியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!
  • Close menu