உ.பிக்கு கொடுத்ததில் பாதி கூட தமிழகத்துக்கு இல்லை.. வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு!

Author: Hariharasudhan
10 October 2024, 7:21 pm

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 7,268 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக 1 லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடியை இன்று (அக்.10) விடுவித்துள்ளது. இது 89 ஆயிரத்து 86 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி அல்லது நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதி அளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரிப் பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு 31 ஆயிரத்து 962 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு 688 கோடி ரூபாயும் வரிப் பகிர்வு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதைத் தவிர, ஆந்திரப் பிரதேசம் ரூ.7,211 கோடி, அருணாச்சலப் பிரதேசம் ரூ.3,131 கோடி, அசாம் ரூ.5,573 கோடி, பீகார் ரூ.17,921 கோடி, சத்தீஸ்கர் ரூ.6,070 கோடி, குஜராத் ரூ. 6,197 கோடி, ஹரியானா ரூ.1,947 கோடி, இமாச்சலப் பிரதேசம் ரூ.1,479 கோடி, ஜார்க்கண்ட் ரூ.5,892 கோடி, கர்நாடகா ரூ.6,498 கோடி, கேரளா ரூ.3,430 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.13,987 கோடி, மகாராஷ்டிரா ரூ.11,255 கோடி, மணிப்பூர் ரூ.1,276 கோடி, மேகாலயா ரூ.1,367 கோடி என வரிப் பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிசோரம் ரூ.891 கோடி, நாகலாந்து ரூ.1,014 கோடி, ஒடிசா ரூ.8,068 கோடி, பஞ்சாப் ரூ.3,220 கோடி, ராஜஸ்தான் ரூ.10,737 கோடி, சிக்கிம் ரூ.691 கோடி, தெலுங்கானா ரூ.3,745 கோடி, திரிபுரா ரூ.1,261 கோடி, உத்தராகண்ட் ரூ.1,992 கோடி மற்றும் மேற்கு வங்கம் ரூ.13,404 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • Popular Actor Slams Surya Jyothikaநாரடிச்சிருவோம்.. உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்திருமே : ஜோதிகாவை விளாசிய பிரபலம்!
  • Views: - 136

    0

    0