ஆடைகள், தோல் பொருட்களுக்கான வரி குறைப்பு.. குடைகள் மீதான வரி 20% அதிகரிப்பு : வேறு எதுக்கெல்லாம் வரிச்சலுகை தெரியுமா..?

Author: Babu Lakshmanan
1 February 2022, 1:34 pm

சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி விதிப்பும், வரிச்சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 4வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதிலும் 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அவர் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். அதில், விவசாயம், தொழில்நிறுவனங்கள், கல்வித்துறை, சுற்றுலாத்துறை என பல்வேறு துறைகளுக்கு ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டுக்கான நிதி பற்றாக்குறை 6.9% ஆக உள்ள நிலையில், 2022-23ம் ஆண்டின் நிதி பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும் என மத்திய அரசு கணித்துள்ளது.

மேலும், இந்த பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரிச்சலுகையும், வரிவிதிப்பும் இடம்பெற்றுள்ளது.

ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைப்பு

வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், ஆபரண கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைப்பு

செல்போன்கள் மற்றும் செல்போன் சார்ஜர்கள் மீதான வரி குறைப்பு

இரும்பு ஸ்கிரேப்ஸ்களுக்கான வரி குறைப்பு

குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிப்பு

அனைத்து இறக்குமதி பொருட்களுக்கான வரி உயர்வு

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…