“நுழைவுத் தேர்வு முறைகேடுகளில் சிக்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை!”-அமலுக்கு வந்தது புதிய சட்டம்!

Author:
22 June 2024, 5:17 pm
Quick Share

நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டத்தை அமல்படுத்தியது ஒன்றிய அரசு. மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ், 5-10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். 2024 பிப்ரவரியில், இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 22 ஆன இன்று முதல் இச்சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.

தொடர்ந்து நீட் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் பொது தேர்வுகள் ஆகியவற்றல் முறைகேடு நடந்த வண்ணம் உள்ளது. இதற்காக சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி மத்திய அரசு தற்போது அதனை அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.இச்சட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இனியாவது எந்த ஒரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடைபெறாது என அனைவராலும் நம்பப்படுகிறது.

Views: - 105

0

0

Leave a Reply