மருத்துவமனைகளை தயாரா வையுங்க.. கொரோனாவுக்காக இல்ல, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 9:25 am

அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர்.

summer - updatenews360

வெப்ப தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் வெப்பத்தின் தாக்கம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.

central gvt - updatenews360

மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப மருத்துவமனைகளின் வசதிகளை பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்களை தடையின்றி இயக்கவும், உட்புற வெப்பநிலையை குறைப்பதற்கு தேவையான கூரைகள், மறைப்புகளை நிறுவ வேண்டும். வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த தேவையான அத்தியாவசிய மருந்துகளை போதிய அளவு கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும். இதுபற்றி மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?