மாநிலங்களுக்கான வரி பகிர்வை விடுவித்தது மத்திய அரசு… தமிழகத்திற்கு ரூ.2,976 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு

Author: Babu Lakshmanan
22 December 2023, 6:42 pm

தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசுகளுக்கு டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.

நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், மாநில அரசுகள் தங்களின் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.72,961.21 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி வழங்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!