சவால் விட்ட ஈஸ்வரப்பா.. கட்சியில் இருந்து தூக்கிய BJP : வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ACTION!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2024, 9:40 am
சவால் விட்ட ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து தூக்கிய BJP : வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ACTION!
கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பாவை பாஜக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்த பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விட்ட நிலையில், ஈஸ்வரப்பா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹாவேரி தொகுதியில் தனது மகனுக்கு லோக்சபா சீட் மறுக்கப்பட்டதால் ஈஸ்வரப்பா, ஷிமோகாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க: ஆடை முழுவதும் அறை.. ₹14 லட்சம் கட்டு கட்டாக கருப்பு பணம் : பேருந்தில் பயணம் செய்த இளைஞர்!
எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திராவை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார். இதற்கிடையே, கட்சியின் மாநில தலைவரையும், எடியூரப்பாவையும் ஈஸ்வரப்பா கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.