மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.
இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். மடிக்கணினி மூலம்தான் இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுதான் அவர் தாக்கல் செய்கிற முழுமையான கடைசி பட்ஜெட், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.
இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ந் தேதி முடிவு அடைய இருந்தது. அதை முன்கூட்டியே 10-ந் தேதி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன.
11-ந் தேதி, 12-ந் தேதி சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 10-ந் தேதியே முதல் அமர்வை முடிக்கலாம் என்று கட்சிகள் கேட்டுள்ளன. அலுவல் ஆய்வு குழு முன் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி உள்ளார் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.