காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றம்… தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கு முக்கிய இடம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 5:31 pm

காங்கிஸ் கட்சிக்குள் ஏற்பட்ட மாற்றம்… தமிழகத்தை சேர்ந்தவ பிரமுகர்களுக்கு முக்கிய இடம்!!!

காங்கிரஸ் கட்சி கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. 2014, 2019 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது.

மேலும் பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியும் உணர்ந்துள்ளது.

பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த குழு தான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவில் மொத்தம் 39 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, ஏகே அந்தோனி, அம்பிகா சோனி உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

மேலும் திக்விஜய்சிங், ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கான், பிரியங்கா காந்தி, சசி தரூர், ரன்தீப் சுர்ஜேவாலா, சல்மான் குர்ஷித், ஜெய்ராம் மரேஷ், சச்சின் பைலட், கேசி வேணுகோபால் உள்பட 39 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து ப சிதம்பரம் மட்டும் காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி குழுவில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் நிரந்த அழைப்பாளர்களாக (Permanent Invitees) வீரப்பமொய்லி, ஹரிஷ் ராவத், ஹரிபிரசாத், மணிஷ் திவாரி உள்பட 18 பேர் உள்ளனர்.

மேலும் பொறுப்பாளர்களாக தமிழகத்தை சேர்ந்த செல்லக்குமார், பக்தா சரண்தாஸ், அஜய் குமார், ஹரிஷ் சவுத்ரி, ராஜீவ் சுக்லா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 345

    0

    0