கட்சி ஆரம்பித்த 2 மாதத்தில் பெயர் மாற்றம் : புதிய பெயரை சூட்டினார் குலாப் நபி ஆசாத்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 8:03 pm

ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் குலாம் நபி ஆசாத் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

அது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டர் மாதம் வெளியிட்டார். செப்டம்பர் 26, 2022 அன்று, அவர் தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி என்று பெயரிடப்பட்டது.

பதவியேற்பு விழாவில் அவர் கூறுகையில், ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் தனது கட்சி இயங்குகிறது என்று கூறினார். இந்த நிலையில், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரை முற்போக்கு ஆசாத் கட்சி என்று மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஆணையத்திடம் இதற்கான விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான பொது அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 397

    0

    0