சத்தீஷ்கர் முதலமைச்சருக்கு சவுக்கடி : வலது கையால் சவுக்கடி வாங்கிய காட்சிகள் இணையத்தில் வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan25 October 2022, 1:32 pm
சத்தீஷ்கர் முதலமைச்சராக பதவி வகித்து வரும் பூபேஷ் பாகல், பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 12-வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து சென்று கவுரவப்படுத்தினார்.
இதுபோன்று தனது மாநில நலனுக்கு தேவையான பல விசயங்களை முன்னெடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கவுரி-கவுரா பூஜையில் அவர் கலந்து கொண்டார்.
சத்தீஷ்கரில் ஆண்டுதோறும் இந்த பூஜை சிறப்புடன் கொண்டாடப்பெறும். இந்த நிகழ்ச்சியில் சவுக்கால் அடிக்கும் சடங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாகல் பங்கேற்றார்.
அவருக்கு சவுக்கடி அளிக்கப்பட்டது. இந்த சவுக்கு சொந்தா என அழைக்கப்படுகிறது. குஷ் எனப்படும் ஒரு வகை புற்களை கொண்டு இந்த சவுக்கு தயாரிக்கப்படுகிறது.
இதன்படி, நபர் ஒருவர் சவுக்கை கொண்டு பாகலின் வலது கையில் ஓங்கி வேகமுடன் அடிக்கிறார். அவற்றை அவர் பொறுமையாக ஏற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, மேளதாளங்கள் உள்ளிட்ட இசை கருவிகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன.
Can Modi ji do this??@bhupeshbaghel 🔥🔥🔥 pic.twitter.com/UVpB3dFYaq
— Manish Tiwari (@livemanish_) October 25, 2022
இந்த பாரம்பரிய வழக்கத்தின்படி, சவுக்கடி பெறுபவர்களுக்கு ஆசியும், வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சத்தீஷ்கரின் வளம் மற்றும் நலத்திற்காக இந்த பாரம்பரிய சடங்கில் சத்தீஷ்கார் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்து கொண்டுள்ளார்.