அண்ணியுடன் கள்ளத்தொடர்பு? கற்பை நிரூபிக்க கொளுந்தன் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 7:09 pm

தெலுங்கானாவின் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது அண்ணன் மனைவியுடன் கள்ள தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து சந்தேகப்பட்ட அண்ணன் தனது தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது குற்றம் செய்யவில்லை என்றால் அதை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் கூறியுள்ளார்.
அதன்படி, அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக் கம்பி ஒன்றை போட்டு வைத்துள்ளனர். நெருப்பில் கிடந்து சூடான அந்த கம்பியை வெறும் கைகளால் எடுத்து அகற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

இந்த அக்னி பரீட்சையைச் செய்தவருக்கு கையில் தீக்காயம் ஏற்படாவிட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்பது நம்பிக்கை. தம்பியும் பஞ்சாயத்தார் சொன்னபடி பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியை வெற்றுக் கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து வீசி அக்னி பரீச்சையை செய்துவிட்டார்.

பிப்ரவரி 25ஆம் தேதி இந்த அக்னி பரீட்சை நடத்திருக்கிறது. இருந்தாலும் திருப்தி அடையாமல் அவரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

இதனால் அந்த நபரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் அவர்கள் சொன்னபடி அக்னி பரீட்சை செய்தபோது கையில் தீக்காயம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்.

பிறகும் அவரை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி பஞ்சாயத்துத் தலைவர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.11 லட்சம் தொகையை பறித்துக்கொண்டனர் என்றும் அதற்குப் பிறகுதான் அக்னி பரீட்சை நடத்த ஏற்பாடு செய்தனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Nithya Menon Kisses Director Mysskin தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
  • Views: - 648

    0

    0