74 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த சீட்டா வகை சிறுத்தைகள் : பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்கிறார் பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2022, 11:08 am
Namibia Chetah India - Updatenews360
Quick Share

நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை. கடைசியாக, சத்தீஸ்கரின் கோரியா பூங்காவில் இருந்த சிறுத்தை, 1948ல் இறந்தது. இதையடுத்து, 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிறுத்தைகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது.

74 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த சீட்டா வகை சிறுத்தைகள் : பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்கிறார் பிரதமர் மோடி!!

இந்த சிறுத்தைகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்காக, நமீபியா சென்றடைந்த தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்த சிறுத்தைகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, இன்று காலை வந்தடைந்தது.

74 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த சீட்டா வகை சிறுத்தைகள் : பிறந்தநாளை முன்னிட்டு விடுவிக்கிறார் பிரதமர் மோடி!!

அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்த நாளான 17ம் தேதி, இந்த சிறுத்தைகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 477

    0

    0