“ஷூ க்குள்ள 22 கோடியா?, பெண்ணின் ஸ்மார்ட் கடத்தல் டெக்னிக்” -கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்!

Author:
27 June 2024, 1:06 pm

இன்று நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானதில் கடத்திவரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது. ஷூக்களில் மறைத்து வைத்து 2.2 கிலோ கொக்கைனை கடத்தி வந்துள்ளார்.கென்யாவை சேர்ந்த இளம்பெண்.மேலும் இவர் ஷூக்களின் அடி பாகங்களில் ரகசிய அறை அமைத்து போதைப்பொருள் மறைத்து கடத்தி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


அந்தப் பெண் வைத்திருந்த மேலும் 5 ஷூக்களிலும் போதைபொருள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கென்யா நாட்டுப் பெண், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் இவருக்குப் பின்னால் யார் இருப்பார்கள்? சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என அந்த இளம்பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு இக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 308

    0

    0