உண்மையான ஹீரோயின் இவங்கதான்.. அலுவலகத்தில் புகுந்த பாம்பை கையால் பிடித்த சிங்கப்பெண்..!(video)

Author: Vignesh
31 July 2024, 12:53 pm

பாம்பு என்று கூறியதும் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், இளம்பெண் ஒருவர் அலுவலகத்தில் இருந்த பாம்பு ஒன்றை எந்தவித அச்சமின்றி வெறுங்கையால் லாவகமாக பிடிப்பது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் பதற்றம் அடைந்த ஊழியர்கள் அந்த ஊரில் பாம்பு பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இளம் பெண்ணை அழைத்து உள்ளனர்.

அலுவலகத்தில் புகுந்த பாம்பை அந்த இளம் பெண் எந்தவித சலனம் இன்றி வெறும் கையால் பிடித்து சாக்குப்பையில் போடுகிறார். மேலும், இது விஷத்தன்மை இல்லாத சாரை பாம்பு வகையை சேர்ந்ததுதான். பயப்படத் தேவையில்லை என்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினர். உண்மையான ஹீரோயின் அந்த பெண் என பலரும் அந்த பெண்ணின் வீர தீர சாகசத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 206

    0

    0