விஷமாக மாறிய ‘சிக்கன் ஷவர்மா’…19 வயது இளைஞரை காவு வாங்கிய கொடூரம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2024, 8:23 am

விஷமாக மாறிய ‘சிக்கன் ஷவர்மா’…19 வயது இளைஞரை காவு வாங்கிய கொடூரம்..!!

கோழி இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் ஷவர்மா சாலையோர கடைகள், உணவகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஷவர்மா இன்றைய தலைமுறைகளின் பேவரைட் பட்டியலில் உள்ளது. ஆனால் சில சமயங்களில் இந்த உணவு விஷமாகி உயிரை காவு வாங்குகிறது.

அந்தவகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ என்ற பகுதியில் உணவகம் ஒன்றில் கடந்த 3ம் தேதி 19 வயது இளைஞர் ஒருவர் ‛சிக்கன் ஷவர்மா” வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட நாள் முதல் கடந்த சில நாட்கள் அவருக்கு கடுமையான வயிற்று வலி , வாந்தி ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் நகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இ

ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இறந்த இளைஞர் பெயர் பிரதாமேஷ் என தெரிவந்தது. சிக்கன் ஷவர்மாவே இறப்பு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கின்றனர். அண்மையில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பல இடங்களில் இது தடை செய்யப்பட்டு வந்தாலும், சிலர் இதை இன்னும் விற்பனை செய்து வருகின்றனர். காலாவதியான கோழி இறைச்சி பயன்படுத்துவதே உயிருக்கு ஆபத்தாக மாறுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!