வெள்ளை கலருல மாங்காய்? கோழியிட்ட அதிசய மாங்காய் வடிவிலான முட்டை : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 7:43 pm

கோழிகள் சாதாரணமாக நீள்வட்ட வடிவில் முட்டையிடும். ஆனால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஒரு கோழி மாங்காய் வடிவிலான முட்டையை இட்டுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டம் பிட்டாபுரத்தை சேர்ந்த சத்தி பாபு என்பவருடைய கடையில் இந்த மாங்காய் முட்டை தற்போது உள்ளது. சத்தி பாபு வழக்கம்போல் விற்பனைக்காக அந்த கோழிப்பண்ணையில் இருந்து முட்டை வாங்கியிருந்தார்.

அதில் ஒரே ஒரு முட்டை மட்டும் மாங்காய் வடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாங்காய் போல் காட்சியளிக்கும் அந்த கோழி முட்டை தற்போது பிட்டாபுரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

https://vimeo.com/688862621
  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!