முதலமைச்சர் கைது.. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை : அடுத்த முதலமைச்சராக அமைச்சர் தேர்வு!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 9:02 am

முதலமைச்சர் கைது.. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை : அடுத்த முதலமைச்சராக அமைச்சர் தேர்வு!

ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன். ஆனால் நீதிமன்றம்மனுக்களை தள்ளுபடி செய்யவே நேற்று அமலகத்துறை முன் ஆஜரானார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.

முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன். ஆனால் நீதிமன்றம்மனுக்களை தள்ளுபடி செய்யவே நேற்று அமலகத்துறை முன் ஆஜரானார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்டு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார். இதன் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர் சோரன். பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு பின்னர் அடுத்த ஜார்கண்ட் மாநில முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா மற்றும் ஜார்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவுக்கு ஆதரவு இருக்கும், அவர்தான் அடுத்த முதல்வராக வருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் எம்எல்ஏவாக இல்லை. இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தல் வைக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவருக்கு எம்எல்ஏ ஆதரவு குறைவாக இருந்துள்ளது.

சம்பாய் சொரணை முதல்வராக்க வேண்டும் என்று பலரும் ஆதரவளித்ததை எடுத்து சம்பா சூரன், தன்னை முதல்வர் பதவிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

முன்னதாக ஆளும் ஜார்கண்ட் மாநில முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியானது, ஜார்கண்ட் முக்தி மோட்சாவுக்கு என்றும் துணையாக, ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sanam shetty released video on tharshan arrest தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!