விதிகளை மீறிய முதலமைச்சரின் சகோதரி கைது : அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.. அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2023, 11:33 am

முதலமைச்சரின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளதாக அரசியல் கட்சியனரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா ஒய் எஸ் ஆர் தெலுங்கானா பார்ட்டி என்ற பெயரில் தெலுங்கானாவில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார்.

அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது அவர் தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை செய்து வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத்தில் முகாமிட்டிருந்த அவர் அங்கு நேற்று பாதையாத்திரை மேற்கொண்டார்.

ஷர்மிளாவை வரவேற்று ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சியினர் அமைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள், கட்டவுட்டுகள் ஆகியவற்றை ஆளும் பாரதிய ராஷ்டிய சமாதி கட்சி தொண்டர்கள் நேற்று இரவு சேதப்படுத்திவிட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரண்டு கட்சி தொண்டர்களும் மோதி கொள்ளும் வகையில் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்மிளாவின் பாதயாத்திரைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இன்று காலை போலீசார் திடீரென்று ரத்து செய்து சர்மிளாவுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் சர்மிளா பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறினார்.

எனவே அவரை கைது செய்த போலீசார் தற்போது ஹைதராபாத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 550

    0

    0