அலுமினிய குண்டாவில் சிக்கிய குழந்தை : ஒரு மணி நேரமாக பரிதவித்த பெற்றோர்…வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2023, 6:53 pm

தெலுங்கானா மாநிலம் வரங்கள் மாவட்டத்தில் குடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக், தேவி தம்பதியினருக்கு மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.

வீட்டில் அருகே விளையாடி கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கே வைக்கப்பட்டுள்ள அலுமினியம் குண்டாவில் சிறுவன் சிக்கிக்கொண்டான்.

குழந்தை அழுகை சத்தத்தை கேட்டு பெற்றவர்கள் அங்கு வந்து பார்த்தபோது குழந்தை அலுமினிய குண்டாவில் சிக்கியது கவனித்த பெற்றோர்கள் குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

https://vimeo.com/786892076

அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் வெல்டிங் கடைக்கு சென்று அங்கிருந்து கட்டரை வாங்கி வந்து அதன் மூலம் அலுமினிய குண்டாவை வெட்டி குழந்தையை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை காப்பாற்றினர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?