வயநாடு நிலச்சரிவால் மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகள்.. மகிழ்விக்க திடீர் விசிட் அடித்த நகைச்சுவை நடிகர்..!
Author: Vignesh17 August 2024, 7:02 pm
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகள் முன் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கேரளா பிரபல நகைச்சுவை நடிகர் வினோத் கோவூர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது முகாம்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வாடகை வீடுகளை எடுத்துக் கொண்டு செல்ல துவங்கி இருக்கிறார்கள். இருப்பினும் முகாம்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. முகாம்களில் தங்கி உள்ள குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அம்மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வினோத் கோவூர் முகாம்களில் உள்ள குழந்தைகள் முன்பு வந்து பேசி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். முகங்களில் தங்கி உள்ள குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.