பாதாம் என நினைத்து பழத்தை சாப்பிட்ட குழந்தைகள்.. 16 பேருக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 5:55 pm

உத்தர பிரதேச மாநிலம் சுனார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கன்சிராம் அவாஸ் காலனியைச் சேர்ந்த சில குழந்தைகள் நேற்று பள்ளியிலிருந்து வந்தவுடன் அருகிலுள்ள எல்ஐசி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குழந்தைகள் ஜட்ரோபா என்ற நச்சுத்தன்மை வாய்ந்த பழத்தை பாதாம் என்று தவறாக நினைத்து சாப்பிட்டனர். இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தைகள் சுனாரில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர்கள் மண்டல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மிர்சாபூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குழந்தைகளின் உடல்நலம் சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?