கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து சரமாரி தாக்குதல் : கையை விரித்த பிரபல கல்லூரி நிர்வாகம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 December 2022, 5:33 pm
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சாலையில் கும்மாங்குத்து போட்டு மோதி கொண்ட மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் சமீபத்தில் ஸ்ரீ சைதன்யா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி உள்ளது.
அங்கு நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பின் சாலையில் மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டை போட்டு கொண்டனர்.
அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் குத்தியும், காலால் எட்டி உதைத்தும் சண்டை போட்டனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஆனால் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு வெளியே நடைபெற்ற இந்த மோதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறது. போலீசார் இதைப்பற்றி இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறி உள்ளனர்.