ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் இடையே மோதல் : கற்கள், நாற்காலிகள் வீச்சு… பரபரப்பு.. பதற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 9:01 pm

ஆந்திரா: ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் கவுன்சிலர்களிடையே கடும் மோதல். நாற்காலி வீச்சு.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் கொண்ட பள்ளி நகராட்சி அலுவலகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது ஆளும் கட்சி ஆன ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கவுன்சிலர்கள் மீது நாற்காலி மற்றும் கற்கள் ஆகியவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சமாதான முயற்சியை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இந்த மோதல் பற்றி வழக்குப்பதிவு செய்து ஆளும் கட்சி கவுன்சிலர்களை கைது செய்ய வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!