கிரிக்கெட் விளையாடும் போது மோதல்.. ஒரு தரப்பு மாணவர்களை விரட்டி சென்று பேட்டால் தாக்கிய கொடூரம் : அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan4 January 2023, 1:55 pm
அன்னமைய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் போது பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவனை சக மாணவன் பேட்டால் அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரு தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சார்ந்த மாணவர்கள் மீது கிரிக்கெட் பேட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்த துவங்கினர்.
ஒரு மாணவனை மட்டும் மற்ற தரப்பினர் குறி வைத்து தாக்கியதால் அந்த மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவனை விடாமல் விரட்டி சென்ற மாணவர்கள் கிரிக்கெட் பேட்டால் தாக்கினர்.
அப்போது கீழே விழுந்த மாணவனை ஒரு மாணவன் கிரிக்கெட் பேட்டால் தலையில் தாக்க முயன்றான். இந்த நிலையில் அங்கிருந்து கல்லூரி வளாகத்துக்குள் தப்பி ஓடிய மாணவனையும் தாக்குதல் நடத்திய மாணவர்கள் கும்பல் விரட்டி சென்றது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இது பற்றி யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசார் கவனத்திற்கும்,கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சென்றது.
எனவே இன்று போலீசரும், கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் பற்றியும், மாணவனை கிரிக்கெட் பேட்டால் தாக்கியது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.