முதலமைச்சர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது.. பல ஆயிரம் கோடி மோசடி புகார் : அதிர்ச்சியில் ஆளும் கட்சி..!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 10:25 am

புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நிகழ்ந்த முறைகேடு அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே, டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும் இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஊழல் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரித்து வருகிறது.

இந்த ஊழல் தொடர்பாக தொழிலதிபர் அமித் அரோரா என்பவரை கைது செய்து அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சில தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

அதாவது,”குருகிராமில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் அமித் அரோரா தனது வாக்குமூலத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்த சவுத் குரூப்பில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் மகளும், தெலங்கானா எம்எல்ஏவுமாக இருக்கும் கவிதா மிகவும் முக்கியமான நபர்,” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த முறைகேட்டில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நிறுவனம் தவறான வழியில் லாபம் அடைய உதவியதாக கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…
  • Close menu