சிக்கலில் முதலமைச்சரின் மகள்… மாதாமாதம் அக்கவுண்டுக்கு வந்த பணம் ; ரூ.1.72 கோடி எப்படி வந்தது..? நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 1:02 pm

தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் பணம் பெற்றதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனத்துடன், தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்க தொழில் ரீதியாக ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், எந்த சேவையும் வழங்கப்படாமலேயே மாதா மாதம் பணம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.3 லட்சமும், வீணா விஜயனுக்கு ரூ.5 லட்சமும் ஒவ்வொரு மாதமும் பணம் வந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மாதத் தவணையாக ரூ.1.72 கோடி பெற்றதாக சொல்லப்படுகிறது.

வீணா விஜயன் நிறுவனத்திற்கும், சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.7 கோடி ரூபாய் அளவுக்கு சந்தேகத்திற்குரிய நிதிப் பரிவர்த்தனை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது கேரள அரசியலில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 441

    0

    0