பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம்.. திமுகவை குறை சொல்ல அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை ; முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்!!

Author: Babu Lakshmanan
29 February 2024, 1:58 pm

பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூ.17,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், நெல்லை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து பணம் சம்பாதிக்கவே திமுக, காங்கிரஸ் துடிப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் இனி திமுக எனும் கட்சியே இருக்காது என்று கூறிய அவர், திமுக வாரிசு அரசியலை செய்து வருவதாகவும், திமுகவை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக கடுமையாக தாக்கி பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் எதிர்வினையாற்றி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தி.மு.க.வைப் பற்றியும், தி.மு.க. அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி, தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது.

எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும். எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டி திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா? என்று தெரியவில்லை. பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர் மோடி.

நீட் தேர்வை எதிர்க்கிறோம் ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். நீட் தேர்வை எதிர்க்கிறோம் ஏழை மக்களின் மருத்துவக் கல்வி கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம்.

கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்க தெரியாத பா.ஜ.க. வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன். ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை தராமல், வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடிக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!