திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…மேற்கு வங்கத்தில் சோகம்..!!

Author: Rajesh
27 January 2022, 2:14 pm

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் அருகே திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஷியாமல் பவுரி, பிங்கி பௌரி, அன்னா பௌரி மற்றும் நடபர் பவுரி ஆகியோர் உயிரிழந்தனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

இந்த விபத்தில், மேலும் கிராமவாசி ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகையில், திறந்த காஸ்ட் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய நான்கு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!