பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பே நல்ல செய்தி சொன்ன அண்ணாமலை… மகிழ்ச்சியில் காவிரி டெல்டா மாவட்டங்கள்..!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 12:08 pm

பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில், டெல்டா மாவட்ட மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது குறித்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளான வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு ஆகிய 3 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் டெல்டா மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, தமிழக பாஜகவினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேவேளையில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கை மனு குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்ததாகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்றென்றும் துணை நிற்கும் என அண்ணாமலை கூறினார்.

இந்த நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இந்த சூழலில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 459

    1

    0