தனியாக இருந்த நண்பரின் மகளை சக நண்பர்களே கூட்டுப்பாலியல் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது
கேரள மாநிலம் திருச்சூர் புன்னயூர் குளம் பகுதியை சேர்ந்த +2 மாணவி, கடந்த சில நாட்களாக வகுப்பறையில் சோகமாகவே காணப்பட்டுள்ளார். இதுபற்றி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர் கேடட் போது உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.
உடனே அந்த ஆசிரியர், மாணவியை மருத்துவரிடம் அழைத்து கொண்டு காண்பித்துள்ளார். மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த போது, அவர் பாலயில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனே குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அவர்கள் மாணிவியிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
மாணவியின் தந்தை அப்பகுதியல் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இதையறிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை வெளியே கொண்டுவர ஜாமீன் கேட்டு மாணவியின் தயார் பல முறை முயற்சித்து வந்துள்ளார்.
இதற்காக அவர் அடிக்கடி மலப்புரம் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அப்படி ஒரு நாள் மலப்புரம் சென்ற தாய், தன் மகள் தனியாக உள்ளதால் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என கணவரின் நண்பருடன் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் அந்த நண்பர்கள் 3 பேர், சரியான தருணம் பார்த்து காக்க வேண்டிய பொறுப்பை மறந்து மாணவியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். மேலும் இதை வெளியே கூறினால் கொன்று விடுவதாக கூறி தனிமையை பயன்படுத்தி அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதை வெளியே சொல்ல முடியாத மாணவி, பள்ளிக்கு வந்து சென்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் மாணவியின் தந்தை நண்பரான ஷாஜி என்ற 26 வயது இளைஞரை போக்சோவில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.