முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த காதலி ; உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை ; அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 7:19 pm

கேரளா : முன்னாள் காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த காதலி, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19) என்பவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.

இந்த நிலையில் லட்சுமி பிரியாவுக்கு அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார். ஆனால், முதல் காதலனுக்கு லட்சுமியை பிரிய மனமில்லை. இதனால், தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இதனிடையே, முதல் காதலனை சந்திக்க வருமாறு லட்சுமி பிரியா அழைத்ததை நம்பி அவர் சென்றுள்ளார். அங்கு லட்சுமி பிரியா தனது 2வது காதலன் மற்றும் கூட்டாளிகள் துணையோடு முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். நேற்று முன்தினம் முழுவதும் அவரை சித்ரவதை செய்தனர். அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டனர்.

பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதனிடையே, மகனை காணவில்லை என அவரது அளித்த புகாரின் பேரில் நடத்திய தேடுதலின் போது, உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 437

    0

    0