வீட்டில் பார்த்த வரனை மணமுடிக்க காதலனின் கதையை முடித்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே அழைத்த தனியறையில் செய்த கொடூர செயல்!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2022, 9:32 pm
கேரள மாநிலம் பாறசாலை அருகேமுறியங்கரை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23). அவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதியாண்டு படித்து வருகின்றார்.
இவருடன் படிக்கும் காரகோணம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ள நிலையில் ஷரோன் ராஜ்க்கு ரெக்கார்ட் புத்தகங்கள் எழுதி கொடுத்து உதவி செய்து வந்தார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மற்றொரு வாலிபருடன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் ஷரோன் ராஜ் மற்றும் அந்த மாணவியின் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 17ம் தேதி, அந்த பெண் கூறியது போன்று கொடுக்கப்பட்ட ரெக்கார்ட் புத்தகங்களை திரும்பபெற, ஷரோன் தனது நண்பர் ரெஜினுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அந்த பெண் குடிக்க குளிர் பானம் மற்றும் பழம் போன்ற ஆகியவை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஷரோன் மயங்கி விழுந்து, பாறசாலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின் உயர் சிகிச்சை பெற திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஷரோனின் இரு சிறுநீரகம் மற்றும் உள் உறுப்புகள் உள்ளிட்ட உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதற்கிடையில், ஷரோனின் தந்தை ஜெயராஜ், பாறசாலை போலீசில், மாணவி தனது மகனுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறி, வழக்குப்பதிவு செய்து நீதி வழங்கக் கோரி புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாறைசாலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.