சூட்கேசில் காதலியை மறைத்து விடுதிக்கு எடுத்த சென்ற கல்லூரி மாணவர் : ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 6:58 pm

சூட்கேசிற்குள் காதலியை மறைத்து கல்லூரி விடுதிக்கு எடுத்த சென்ற மாணவன் கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது

கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரியின் விடுதிக்குள் சூட்கேசில் மறைத்து வைத்து தனது காதலியை அழைத்து சல்ல முயன்றபோது கையும் களவுமாக காவலாளிகளிடம் சிக்கியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பியில் உள்ள மனிப்பால் என்ற ஊரில் உள்ள பொறியியல் கல்லுரியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் கல்லூரி மாணவர் ஒருவர் இரவுநேரத்தில் ட்ராலி சூட்கேசுடன் கல்லூரி விடுதிக்கு வருகிறார்.

விடுதியில் தங்கி படிக்கும் அந்த மாணவர் கொண்டு வந்த சூட்கேஸ் மிகப்பெரிய அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி பாதுகாவலர்கள் அதில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை எடுத்து வருவதாக மாணவர் கூறியுள்ளார்.

ஆனால் சந்தேகமடைந்த பாதுகாவலர்கள் சூட்கேசை திறக்க கூறினர். ஆனால் மாணவர் அது இது என சாக்கு போக்கு கூறி சமாளித்துள்ளார். அதை ஏற்காக பாதுகாவலர்கள் சூட்கேசை திறந்து போது அதில் இருந்து ஒரு இளம்பெண் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.

விசாரணையில், அந்த பெண் மாணவரின் காதலி என்பது தெரியவந்தது. விடுதிக்குள் அந்நியர்களை அனுமதி மாட்டார்கள் என்பதால், தந்திரமாக சூட்கேசில் மறைத்து உள்ளே செல்ல முயற்சித்ததாக மாணவர் கூறினார்.

மாணவனின் காதலியும் அதே கல்லூரி தான் என கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி