அமைச்சர் ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ வந்து அடியுங்கள்… நடிகைகள் குஷ்பு, ராதிகாவுக்கு எச்சரிக்கையுடன் திடீர் அழைப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 8:42 pm

அமைச்சர் ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ வந்து அடியுங்கள்… நடிகைகள் குஷ்பு, ராதிகாவுக்கு எச்சரிக்கையுடன் திடீர் அழைப்பு!!

ஆந்திரா அமைச்சர் ரோஜா பற்றி தரக்குறைவாக பேசிய காரணத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயணா தரக்குறைவாக பேசி இருந்தார்.

அவருடைய பேச்சுக்கு ரோஜா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். குஷ்பூ, ராதிகா ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது ஆந்திராவில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய ஜனசேனா கட்சியின் திருப்பதி நகர பொறுப்பாளர் கிரண் ராயல், ரோஜா மிகவும் ஆபத்தானவர். அவர் சிரஞ்சீவி, ரஜினிகாந்த் மற்றும் எங்களுடைய கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பற்றி பேசிய விவரங்கள் குஷ்பூ, ராதிகா ஆகியோருக்கு தெரியாது.

அவருடைய பேச்சுக்கள் அடங்கி கேசட்டுகளை குஷ்பூ, ராதிகா ஆகியோரின் விலாசங்களை தேடி கண்டுபிடித்து அனுப்பி வைக்கிறோம். அந்த கேசட்டுகளை போட்டு கேட்டு விட்டு அதன் பின் நீங்களே விமானம் ஏறி நகரிக்கு வந்து ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ அதனால் அடியுங்கள்.

ஆந்திராவிலும் நடிகைகள் உள்ளனர். ரோஜா இடம்பெற்றிருக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆந்திராவை சேர்ந்த நடிகைகள், அவர் கட்சியில் இருக்கும் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரி தொகுதி பொதுமக்கள் ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசவில்லை. ஆனால் அவரைப் பற்றி தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள் என்று அப்போது கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 587

    0

    0