‘அன்று ஹிஜாப்…இன்று பைபிள்’: மாணவர்கள் பைபிள் படிக்க பள்ளியில் கட்டாயம்?…கர்நாடகாவில் அடுத்தடுத்து அரங்கேறும் சர்ச்சைகள்.!!

Author: Rajesh
25 April 2022, 5:26 pm

பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஹிஜாப் விவகாரத்திற்கு அடுத்து இப்போது பைபிள் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய ஹிஜாப் விவகாரம் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் தான் சற்று ஓய்ந்தது. தொடர்ந்து இந்து கோயில்கள் முன்பு இருந்த முஸ்லீம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், முஸ்லீம் இறைச்சி வியாபாரிகள் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்க வேண்டும் என்ற சர்ச்சையும் எழுந்தது.

இந்நிலையில், இப்போது அங்கு அடுத்து சர்ச்சையைக் கிளம்பி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியின் செயல் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அதாவது தங்கள் பள்ளிகளில் புனித புத்தகமான பைபிளை எடுத்துச் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், “இந்த பள்ளி கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களை பைபிளை படிக்க வற்புறுத்துகிறது” என்று குற்றஞ்சாட்டி உள்ளார். அதாவது கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் பைபிளை படிக்க வற்புறுத்துவதாக வலதுசாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


அந்த பள்ளியின் +1 மாணவர் சேர்க்கை படிவத்தில், “உங்கள் குழந்தை தார்மீக மற்றும் ஆன்மீக நலனுக்காக மார்னிங் அசெம்பிளி ஸ்கிரிப்ச்சர் கிளாஸ் மற்றும் கிளப்கள் உட்பட அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்றும் உறுதி அளிக்கிறோம்.

அவர் கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த காலத்தில் பைபிள் வைத்திருப்பதையும் எதிர்க்க மாட்டோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தான், பள்ளிகளில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த பேச்சு எழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் சர்ச்சை வெடித்து, நீதிமன்ற உத்தரவு வந்து, இன்னும் ஒருமாத காலம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மீண்டும் இப்படி ஒரு சர்ச்சை கர்நாடகாவில் கிளம்பியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1362

    0

    0