ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு : முதலமைச்சருடனான கருத்து மோதல்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஜனவரி 2023, 5:43 மணி
governor Resign - Updatenews360
Quick Share

முதலமைச்சருடனான தொடர்ச்சியான மோதல் போக்கு நிலவி வருவதால் ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநில அரசு – கவர்னர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது.

பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தக்கரே ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மராட்டியத்தில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மராட்டிய கவர்னர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு எடுத்துள்ளார்.

பதவி விலகல் முடிவை கவர்னர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். கவர்னர் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக மராட்டிய கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மராட்டிய கவர்னர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்வார் அல்லது கவர்னர் பதவியில் இருந்து அவரை மத்திய அரசு விரைவில் விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 436

    0

    1