இண்டியா கூட்டணிக்குள் குழப்பம்… முக்கிய கட்சிகள் அதிருப்தி : தள்ளிப்போய் கொண்டே இருக்கும் கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 7:45 pm

இண்டியா கூட்டணிக்குள் குழப்பம்… முக்கிய கட்சிகள் அதிருப்தி : தள்ளிப்போய் கொண்டே இருக்கும் கூட்டம்!!

“இந்தியா” கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியாக உருவாக்கப்பட்டது. “இந்தியா” கூட்டணியும் கிடுகிடுவென ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் “இந்தியா” கூட்டணி கை கழுவப்பட்ட நிலைக்கு போனது. இது கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது.

தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானாவில் மட்டும் வென்றுள்ளது. சத்தீஸ்கர்- ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸை பாஜக முந்திவிட்டது. இந்த நிலையில் திடீரென டிசம்பர் 6-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உடல்நலன் பாதிப்பால் ஜேடியூ தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவித்தார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டிருப்பதால் டெல்லி கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இதனையடுத்து டெல்லியில் நாளை நடைபெற இருந்த “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் “இந்தியா” கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், டிசம்பர் 17-ந் தேதி அடுத்த “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால் “இந்தியா” கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 17 அல்லது டிசம்பர் 18 என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 470

    0

    0