காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டி..!!
Author: Babu Lakshmanan8 March 2024, 9:09 pm
காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா எனும் கூட்டணியை அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் கட்சி நிறைவு செய்து விட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதகாரணம் கண்ணூர் தொகுதியிலும், ஆலப்புழா தொகுதியில் கேசி வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜ்நந்த்கான் தொகுதியிலும், டிகே சுரேஷ்- பெங்களூர் ஊரக தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.