ஜெயலலிதாவை காப்பியடித்த காங்கிரஸ்.. தெலுங்கானாவில் அதிமுக திட்டத்தை கொண்டு வரும் சோனியா!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 1:48 pm

ஜெயலலிதாவை காப்பியடித்த காங்கிரஸ்.. தெலுங்கானாவில் அதிமுக திட்டத்தை கொண்டு வரும் சோனியா!!!

தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என பல தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி, குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும்; அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

தெலுங்கானா தனி மாநில அமைக்க போராடியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும். வீடுகட்ட ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

விவசாயிகள், குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வழங்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 நிதி உதவி வழங்கப்படும் என அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.

இதை தவிர திருமணமாகும பெண்களுக்க தாலிக்கு தங்கம் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக புதுமைப் பெண்கள் திட்டமாக மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு திமுக மீது ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது தெலுங்கானா காங்கிரஸ் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடக்கூடும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகிறது.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…