ஏழைகள், பழங்குடியினருக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் : ராகுல் காந்தி பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 5:58 pm

ஏழைகள், பழங்குடியினருக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் : ராகுல் காந்தி பெருமிதம்!!

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. ஒரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ் உள்ளது.

இன்னொரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்கும் முயற்சியில் பா.ஜ.க களம் இறங்கி உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பா.ஜ.க, தலைவர்கள் கூறி வருகின்றனர். பழங்குடியினர் முன்னேறக் கூடாது என்று பா.ஜ.க, விரும்புகிறது.

கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் அரசு தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ளது.

அதேபோல் மத்தியிலும் ஆட்சி அமைய வேண்டும். நீர், காடுகள் மற்றும் நிலங்களை நாங்கள் பாதுகாப்போம். 100 நாள் வேலை திட்டத்தில், ஒரு நாள் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்துவோம்.

அங்கன்வாடி பணியாளர்களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். தெலுங்கானாவில் அனைத்து உத்தரவாதங்களையும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

இப்போது நாடு முழுவதும் எங்களது உத்தரவாதங்களை நிறைவேற்றுவோம். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.

நாட்டின் ஒவ்வொரு படித்த இளைஞருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…