காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக மோதியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால், வாக்களிக்கு முறை குறித்து அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதனன் மிஸ்திரி நேற்று விளக்கினார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே அல்லது சசி தரூர் ஆகியோரில் யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படும்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.