Go back சிதம்பரம்… நீதிமன்றத்தில் கிளம்பிய எதிர்ப்பு… ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட காங்., வழக்கறிஞர்கள்… கொல்கத்தா நீதிமன்றத்தில் சலசலப்பு… (வீடியோ)
Author: Babu Lakshmanan4 May 2022, 6:08 pm
மேற்கு வங்க மாநில அரசுக்காக ஆஜராக வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த சக வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி மீது மெட்ரோ டைரிக்களை குறைந்த விலையில் விற்பனை செய்ததாக, அம்மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரிக்கு எதிராகவும், மேற்கு வங்க அரசின் சார்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கொல்கத்தா நீதிமன்றத்திற்கு ஆஜராவதற்காக வந்தார்.
அப்போது, காங்கிரஸ் சட்ட வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த கவுஸ்தவ் பக்ச்சி, மற்றும் மற்றொரு பெண் வழக்கறிஞரான சுமித்ரா நியோகி ஆகியோர், ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Go back சிதம்பரம் என்றும், மம்தா பானர்ஜியின் தரகர் என்றும் சரமாரியாக கோஷங்களை எழுப்பியவாறு, சிதம்பரத்தின் காரை மறித்து போராட்டம் நடத்தினர். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் நீதிமன்றத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரிடையேயும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
0
0