காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தற்போது இருந்து வருகிறார். வயது மூப்பு மற்றும் கட்சியில் பல்வேறு எதிர்ப்புகள் போன்ற காரணங்களால் அவர் அந்தப் பொறுப்பில் நீடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக்கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
This website uses cookies.