ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளார். இந்த நிலையில் ஜெய்ப்பூரை சேர்நத் பட்டியலின நபர் ஒவருர் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் மூத்த போலீஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
51 வயதான அந்த நபர் அளித்த புகார் மனுவில், கடந்த ஜூன் 30ஆம் தேதி நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்னை தாக்கி ஒரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சிவகுமார் பரத்வாஜ் என்னை தாக்கியதுடன் என் மீது சிறுநீர் கழித்தார்.
மேலும் அந்த டிஎஸ்பி, காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனாவின் பெயரை சொல்லி, “அவர் இந்த பகுதியின் ராஜா” என்றபடி என்னை அதட்டினார். மேலும் எம்எல்ஏ கோபால் மீனா தனது காலணிகளை நக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.
எம்எல்ஏ கோபால் மீனாவும், போலீசாரும் எனது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு இங்கு நடந்ததை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர்.
இதுகுறித்து புகார் அளிக்க காவல்துறையினரை அணுகியபோது அவர்கள் புகாரினை ஏற்க மறுத்துவிட்டனர். சில போலீஸ் உயரதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அந்த புகாரில் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதனால் நீதிமன்றத்தை அணுகியதாகவும், அதன்பின் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்தாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், ஜூன் 30 அன்று நடந்த சம்பவம் குறித்து, பயத்தின் காரணமாக ஜூலை 27 அன்றே புகா அளித்ததாகவும் கூறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின இளைஞா் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா சிறுநீா் கழித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.