தவறான தகவல்களை பரப்புகிறார் சுரேஷ் கோபி: உடனே பதவி நீக்கம் செய்யுங்கள்: கோபத்தில் கொந்தளித்த எம். பி…!!

Author: Sudha
19 ஆகஸ்ட் 2024, 12:18 மணி
Quick Share

தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளுக்காக ஆங்கிலேயர் பென்னி குக், சொந்தப் பணத்தில் கட்டியது தான் முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணையால் இன்றும் பாசனம் பெறும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் பென்னிகுக்கை குலதெய்வம் போல வணங்குகின்றனர். பென்னிகுக் பொங்கல் என்பது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் வாழ்வியலில் ஒன்றாக இருந்தும் வருகிறது.

உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை நன்றாக இருக்கிறது எனவும் அதன் உயரத்தை அதிகப்படுத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுந்தால் யார் பொறுப்பேற்பது? முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஃபேஸ்புக் பதிவைப் படித்தது முதலே முல்லைப் பெரியாறு அணை இடிந்து விழுமோ என்கிற கேள்வி இதயத்தில் இடிபோல் தொடர்ந்து விழுகிறதே எனப் பேசி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பேசும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை, பதவி நீக்கம் செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 587

    0

    0